வணிகவரித் துறையில் ஒரேநேரத்தில் 1,000 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் வணிகவரித் துறையில் ஒரேநேரத்தில் 1,000 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர்ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள அரசாணை: வணிகவரித் துறையில் 1,000 உதவியாளர் பணியிடங்கள், 840துணை வணிகவரி பணியிடங்களாகவும், 160 வணிகவரி அலுவலர்பணியிடங்களாகவும் தரம் உயர்த்தப்படும் என்று 2021-22 நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் நிதி மற்றும்மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவித்தார்.

அதை நடைமுறைப்படுத்தும் வகையில் 1,000 உதவியாளர் பணியிடங்களை தரம் உயர்த்துவது தொடர்பான கருத்துருவை அரசுக்கு வணிகவரி ஆணையர் அனுப்பியிருந்தார். அதில் வணிக வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும், வணிகவரி வருவாயை உயர்த்தும் வகையிலும் 1,000 உதவியாளர் பணியிடங்களை 840 துணைவணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும், 160 வணிகவரி அலுவலர்பணியிடங்களாகவும் தரம் உயர்த்தவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

வணிகவரி ஆணையரின் கருத்துருவை அரசு ஆய்வு செய்து1,000 உதவியாளர் பணியிடங்களை தரம் உயர்த்தி ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து வணிக வரித்துறையில் பணியாற்றும் 1,000 உதவியாளர்கள் துணை வணிகவரி அலுவலர்களாகவும், வணிகவரி அலுவலர்களாகவும் பதவிஉயர்வு பெறுவார்கள்.

வணிகவரித்துறையில் ஒரேநேரத்தில் 1,000 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஒப்புதல் அளித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு துறையின் அமைச்சர் பி.மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்