சென்னை: 110 மெட்ரோ ரயில்களை நிறுத்தும் வகையில், கட்டுப்பாட்டு மையத்துடன் 48.89 ஏக்கர் பரப்பளவில் மாதவரத்தில் மெட்ரோ ரயில் பணிமனை அமைய உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 2-ம் கட்ட வழித்தடத்தில் 48.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.284 கோடி மதிப்பில் மாதவரத்தில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறுகையில், "மாதவரத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிமனையில் மூன்று பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிப்படையில் 110 மெட்ரோ ரயில்கள் நிறுத்தலாம்.
இந்தப் பணிமனையில் 24 ரயில் நிறுத்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்கள் நிறுத்த 10 இருப்பு பாதைகளும், பழுது மற்றும் சுத்தம் செய்ய 7 இருப்பு பாதைகளும், மெட்ரோ ரயில்களை ஆய்வு செய்ய 7 இருப்பு பாதைகள் என மொத்தம் 24 இருப்பு பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர, 1.4 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டத்திற்கான இருப்பு பாதையும் அமைக்கப்படவுள்ளது.
2 கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5 இல் இயக்கப்படவுள்ள ரயில்களுக்கான பனிமனையாக இது இருக்கும். மாதவரம் மெட்ரோ ரயில் பணிமனை பணிகள் அனைத்தும் 2024-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago