புதுவையில் இந்திய திரைப்பட விழா வரும் 8-ம் தேதி தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகியுள்ள 'இறுதிச் சுற்று' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை இயக்குநர் சுதா கொங்கராவிடம் முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார்.
புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, மத்திய அரசு திரைப்பட விழா இயக்குநரகம், நவதர்சன் திரைப்படக்கழகம் சார்பில் இந்திய திரைப்பட விழா-2017 ஐந்து நாட்களுக்கு புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் நடைபெறுகிறது.
இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுவையில் மட்டும்தான் 34 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதுவையில் இளைய சமுதாயத்தினரிடம் நல்ல சினிமா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இந்தியாவின் அனைத்து மொழி மக்களின் வாழ்வுநிலையும், பழக்க வழக்கங்களை அறியவும், ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அனைத்து மொழி திரைப்படங்களும் இங்கு திரையிடப்படுகிறது.
மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களைத் தேர்வு செய்து திரைப்பட விழாவை நடத்துகிறது. புதுவை அரசு அத்திரைப்படங்களில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்தை தேர்வு செய்து விருது வழங்குகிறது. சிறந்த தமிழ்த்திரைப்படத்தை இயக்கியவருக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது, பணமுடிப்பு ரூ. 1 லட்சம் தரப்படும்.
வரும் 8-ம் தேதி மாலை அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் நடைபெறும் விழாவில் விருது, பண முடிப்பை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார். 2016-ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை இறுதிச்சுற்று திரைப்பட இயக்குநர் சுதா கொங்கரா பெறுகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago