சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, கடந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் இன்னும் அதன் முடிவுகள் வெளியாகவில்லை. முந்தைய ஆண்டுகளைவிட அதிக அளவிலான தேர்வர்கள் பங்கேற்பு உட்பட பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவு வெளியீட்டில் தொடர் தாமதம் நிலவி வருகிறது.
குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி விரைவாக வெளியிடக் கோரி சமூக வலைதளங்கள் வாயிலாக தேர்வர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த ஜூலை 24-ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் இந்த
மாத இறுதிக்குள் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கையும் 9,870 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago