பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை இன்று கூடுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

சட்டப்பேரவையில் வரும் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் மார்ச் 20-ம் தேதி தாக்கல் செய்கிறார். 21-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.

தமிழக பொது பட்ஜெட்டை பொருத்தவரை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இது மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கும் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளது.

இந்நிலையில், தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழக அமைச்சரவை இன்று (மார்ச் 9) மாலை 5 மணிக்கு கூடுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 மாதாந்திர உரிமைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களுக்கான விரிவாக்கத்துக்கு நிதி ஒப்புதல் மற்றும் தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்