சென்னை: சென்னை சவுகார்பேட்டை பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. அப்போது, ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.
சென்னையில் ஹோலி பண்டிகை இன்று (மார்ச் 8) முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹோலி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னையில் வட மாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் சவுகார்பேட்டை பகுதியில் காலை 8 மணி முதல் வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம் பெண்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட தொடங்கினர். பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கைகுலுக்கி ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
சிலர் வண்ணப் பொடிகளை தண்ணீரில் கலந்து நண்பர்கள் மீது பீய்ச்சியடித்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் பலரும் வண்ணப் பொடிகளை தூவியபடி நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வலம் வந்தனர். வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் ஹோலி பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago