பாமக மீதுள்ள ஜாதிக்கட்சி பிம்பம் மாறி வருகிறது: மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: பாமக என்றால் ஜாதிக் கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது என்று சென்னையில் நடந்த கட்சியின் மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமக மாநில மகளிர் சங்க நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குத் தலைமையேற்று கட்சியின் தலைவர் அன்புமணி பேசியதாவது:

ஆணின் வெற்றிக்குப் பின் பெண்எனக் கூறுவது சுயநலம். இருவரின்வெற்றிக்குப் பின் இருவரும் இருக்க வேண்டும். எல்லா தகுதி, திறமை, புதுமை இருந்தாலும் நம்மிடம் அதிகாரம் மட்டும் இல்லை. அது விரைவில் வரும். அதிகாரம் மட்டும் என்னிடம் கிடைத்தால் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குதான்.

ஆன்லைன் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் கையெழுத்திட மறுக்கிறார். நான் ஆட்சியில் இருந்தால் 162-வது பிரிவைப் பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருப்பேன்.

பாமக என்றால் ஜாதிக்கட்சி என்ற பிம்பம் உடைக்கப்பட்டு வருகிறது. நமக்கு அனைவரும் வேண்டும். வட இந்தியர்களும் நம் சகோதரர்கள்தான். உலக மகளிர் தினத்தன்று மதுவிலக்கு அறிவிப்பை மகளிர் எதிர்பார்க்கின்றனர். அதை அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பசுமைத் தாயக அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி பேசும்போது, “ பாமகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சுகாதாரத் துறை என்றால் அதில்அன்புமணியின் சாதனைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. இவர் கொண்டுவந்த 108 ஆம்புலன்ஸ் திட்டம் மூலம் பயன்பெற்றவர்கள் ஏராளம். ஆண் குழந்தைகளுக்கு என்னென்னசொல்லித் தருகிறோமோ, அவை அனைத்தையும் பெண் குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

மேலும்