அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களில் கடைசி வரை இருக்கும் கூட்டத்தை வைத்தே அந்தக் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை அறியலாம்.
அதேவேளையில், எந்தவொரு அரசியல் கட்சியும் நடத்தும் நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்தால், பணம்- உணவு- மது கொடுத்து ஆட்களை அழைத்து வந்துள்ளதாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டுவது உண்டு.
குறிப்பாக, எதிர்க்கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சியில் கூட்டம் குறைவாக இருந்தால் போலீஸ் மூலம் யாரையும் வரவிடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்துவிட்டதாகவும் புகார் கூறுவது வழக்கம்.
எந்தவொரு நிகழ்ச்சியையும் எதற்காக நடத்துகிறோம்? இதில் பங்கேற்க வேண்டியதன் அவசியம் என்ன? என்பது குறித்து கட்சித் தொண்டர்களிடமும், மக்களிடமும் அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்தாமல், அப்போதைய சூழலுக்கேற்ற அரசியலாக கருதி நடத்துவதாலேயே, நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே இருக்கைகள் காலியாகிவிடுகின்றன என்று கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், திருச்சியில் அண்மையில் நடைபெற்ற திமுக மற்றும் பாஜக பொதுக்கூட்டங்கள் இருந்தன. இரு நிகழ்ச்சியிலும் கூட்டம் நிறைவடைவதற்கு முன்பே குறிப்பாக, முக்கிய தலைவர்கள் பேசுவதற்கு முன்பே ஆயிரத்துக்கும் அதிகமான இருக்கைகள் ஆட் கள் இல்லாமல் காலியாகி விட்டன.
மழையும், நேரமும்...
இதுகுறித்து திமுக தரப்பில் கேட்டதற்கு அவர்கள் கூறும்போது, "திமுகவைப் பொறுத்தவரை எத்தனை பேரையும் திரட்டும் சக்தி உண்டு. இதை பலமுறை நிரூபித்துள்ளோம். திருச்சி கூட்டத்திலும் எதிர்பார்த்த கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் வந்திருந்தவர்களில் பெரும்பாலா னோர் திமுகவினர்தான். கடைசி நேரத்தில் மழை பெய்ததால் கூட்டம் லேசாக கலைந்தது. குறிப்பாக, தஞ்சாவூர் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் திமுக செயல் தலைவருக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இருந்தன” என்றனர்.
பாஜக தரப்பில் கூறும்போது, “நேரம் அதிகமாகிவிட்ட காரணத்தால்தான் கடைசி நேரத்தில் கூட்டம் குறைந்துவிட்டது. ஆனால், சொல்ல வந்த செய்தியை அதற்கு முன்பு பேசியவர்களே மக்களிடத்தில் சேர்த்துவிட்டனர்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago