''யாரும் நம்பாதீங்க... அது வதந்தி'': வட மாநில தொழிலாளர்களிடம் பேசிய முதல்வர்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: வட மாநில தொழிலாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகளும், காட்சிப்பதிவுகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின. பூதாகரமாக வெடித்த இந்த பிரச்சினையில் பிஹார் மற்றும் தமிழக அரசுகள் தலையிட்டு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பிஹார் அரசு அதிகாரிகள் குழு ஒன்று தமிழகத்திற்கு வந்து இங்குள்ள பிஹார் மாநில தொழிலாளர்களிடம் ஆய்வு நடத்தி வருகிறது. அப்போது தமிழகத்தில் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பிஹார் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதனால் நிலைமை திருப்திகரமாக இருக்கிறது என்று பிஹார் அரசு குழுவும் தெரிவித்தது.

இந்நிலையில், நாகர்கோவிலில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தனியார் நிறுவனத்திற்கு சென்ற முதல்வர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்களிடம், அந்த வீடியோவை யாரும் நம்பாதீங்க, அது எல்லாம் வதந்தி, தைரியமாக இருங்கள் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்