சென்னை: தமிழகத்தில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்து மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதன்படி, குரூப் 1, குரூப் 2 பிரிவில் இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
இதேபோல், இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்-1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும். குரூப்-2 பகுதிக்கு பகல் நேரத்தில் காலை 9.30 மணியில் இருந்து பிற்பகல் 3.30 மணி வரை, இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» சிவகங்கை அருகே 200 ஆண்டுகளாக நடக்கும் மஞ்சுவிரட்டு - ஆயிரம் காளைகளால் அதிர்ந்த அரளிப்பாறை
» அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மாதாந்திர உதவிதொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago