சென்னை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடிகர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
சென்னைக்கு வந்த டெல்லி முதல்வர் நடிகர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அரவிந்த் கேஜ்ரிவால் சென்னை வர உள்ளார் அவர் கமல்ஹாசனை சந்திக்க உள்ளார் என்ற தகவல் கசிந்த போது கமல் தரப்பும் அதை மறுக்கவில்லை.
அதையும் தாண்டி கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனை விமான நிலையத்துக்கு அனுப்பிய கமல் அரவிந்த் கேஜ்ரிவாலை வரவேற்று அழைத்து வரச்செய்தார்.
இன்று மதியம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் வருகையை ஒட்டி செய்தியாளர்கள் ரசிகர்கள் காலை முதலே குவிந்துவிட்டனர். மதியம் கமல் அலுவலகத்துக்கு வந்த கேஜ்ரிவாலை கமல்ஹாசன் வாசல்வரை வந்து உள்ளே அழைத்துச் சென்றார்.
அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருவரும் தனியாக அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர். உள்ளே பேசியது என்ன எனபது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஒருவேலை இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கவும் வாய்ப்புண்டு என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago