தி.மலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பின் னோக்கி நடந்து சென்று வெற்று காகிதத்தை மனுவாக கொடுக்க முயன்ற விவசாயிகளை கைது செய்வோம் என காவல் துறையினர் எச்சரித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
மக்கள் குறைதீர்வு மற்றும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதில்லை என கூறி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், திருவண்ணாமலை ஆட்சியர் அலு வலகத்தில் பின்னோக்கி நடந்து சென்று ஆட்சியரிடம் மார்ச் 6-ம் தேதி நடைபெற உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் வெற்று காகிதத்தை மனுவாக கொடுக்க போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டன.
இதையொட்டி, மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமையிலான விவசாயிகள், திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வெற்று காகிதத்துடன் நேற்று திரண்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, ‘சேலத்தில் நடந்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடைபெற்ற கூட்டத்தில், மக்களின் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காதீர்கள், ஒருவரது வாழ்வாகவும், எதிர் காலமாகவும் பார்க்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி யுள்ளார்’ என்றனர்.
வெற்று காகிதங்களுடன் கோரிக்கைளை முன்வைத்து விவசாயிகள் முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள், பின்னோக்கி நடந்து சென்று வெற்று காகிதத்தை ஆட்சியரிடம் மனுவாக கொடுக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், பின்னோக்கி நடந்து சென்று வெற்று காகிதத்தை மனுவாக கொடுக்கக்கூடாது என எச்சரித்தனர். மேலும் முழக்க மிடவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் முன் அனுமதி பெற வேண்டும். எச்சரிக்கையை மீறி பின்னோக்கி சென்றால் கைது செய்வோம் என தெரிவித்தனர்.
» விலை வீழ்ச்சி எதிரொலி - வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்
» இந்தியாவை காட்டிக் கொடுக்காதீர்கள் ராகுல் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கண்டனம்
இதற்கு பதிலளித்த விவசாயிகள், முதல்வர் தெரிவித்துள்ள கருத்தை முன்வைத்துதான் வெற்று காகிதத்தை மனுவாக கொடுக்க போகிறோம் என்றனர். மேலும் அவர்கள், வெற்று காகிதத்தை உங்களிடம் கொடுத்துவிடுகிறோம், நீங்களே ஆட்சியரிடம் ஒப் படைத்து விடுங்கள் என்றனர். வெற்று காகிதத்தை நாங்கள் பெற்றால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் கூறினர். அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், விவசாயிகளை கைது செய்து அழைத்து செல் வதற்கு, ஆட்டோக்களை வரவழைக்க முயன்றனர். இதை யடுத்து கைது நடவடிக்கை உறுதி என்ற காவல்துறையின் பகிரங்க எச்சரிக்கையால், பின்னோக்கி நடந்து சென்று வெற்று காகிதத்தை மனுவாக கொடுக்கும் முயற்சியை விவசாயிகள் கைவிட்டனர்.
பின்னர் அவர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், “வட்டாட்சியர் அலு வலகம் மற்றும் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத் தில் கொடுக்கப்படும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்” என குறிப் பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago