சென்னை: தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்த அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு என்று முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "நாம் செல்லுகின்ற திராவிட மாடல் பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று
"ஏ தாழ்ந்த தமிழகமே!" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு. பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்." என்று முதல்வர் கூறியுள்ளார்.
திமுக நிறுவனரான சி.என். அண்ணாதுரை, தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் இன்று. கடந்த 1967ம் ஆண்டு மார்ச் 6 அன்று சி.என். அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு அப்போதைய ஆளுநர் உஜ்ஜல் சிங் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago