கல்வித் துறை பணியாளர்களுக்கு `இ-ஆபீஸ்' குறித்து பயிற்சி

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் ‘இ-ஆபீஸ்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அனைத்துப் பணியாளர்களுக்கும் இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழக அரசு நிர்வாகத்தில் காகிதப் பயன்பாட்டை குறைக்கும்நோக்கில் ‘இ-ஆபீஸ்’ திட்டம் 2022 ஆக. 1 முதல், பல்வேறு துறைகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. துறையின் தலைமை அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் அரசுப் பள்ளிகளில் விரைவில் இ-ஆபீஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையொட்டி, துறை ஊழியர்களுக்கு இதுதொடர்பாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அலுவலர்கள், பணியாளர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, பள்ளிக்கல்வித் துறையில் கருத்துரு, தகவல் பரிமாற்றம், கோப்புகள் அனைத்தும் இ-ஆபீஸ் மென் பொருள் வாயிலாகவே அனுப் பப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்