ஈரோடு: பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முன்தினம் இரவு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது, எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்.
எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியில், அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதிமுக வலிமையுடனும், சிறப்புடனும் மக்களை நேசிக்கின்ற இயக்கமாக இருக்கும்.
பாஜகவுடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும். அதிமுக தனது கொள்கையில் தெளிவாக உள்ளது. சிறுபான்மையினரை காக்கின்ற இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது என்றார்.
» 1,500 காலாவதியான அரசு பேருந்துகளை கழிவு செய்ய திட்டம்
» பொதுத் தேர்வு கண்காணிப்பாளராக தனியார் ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடாது: தேர்வு துறை உத்தரவு
முன்னதாக, ‘அதிமுகவில் 2 அணிகளும் ஒன்று சேராமல் வெற்றிபெற முடியாது’ என புகழேந்தி கூறியுள்ளது குறித்து கேட்டபோது, ‘தமிழ்நாட்டில் வாக்கு இல்லாதவர்கள் கேள்விக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago