''முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்'' - தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் தன்னை கைது செய்யட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக,வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில், தவறான தகவல்களை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக்கூறி அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE