தாம்பரம்: சொந்த ஊரில் ஹோலி பண்டிகையைக் கொண்டாட வட மாநில தொழிலாளர்கள் நேற்று தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் நிலையத்தில் நேற்று மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். இதனாலா தா்மபரம் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. இவர்கள் தாம்பரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் தங்கி, கட்டிடம், தொழிற் சாலைகளில் பணிபுரியும் ஒடிசா, பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீஸார் வந்து விசாரித்தனர். ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்வதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாம்பரத்தில் இருந்து ஜார்க்கண்ட் செல்லும் ஜாம்ஷீத் எக்ஸ்பிரஸ் ரயிலில் முண்டியடித்து ஏறினர்.
ஆயிரம் பேர் பயணிக்கும் ரயிலில், முட்டி மோதிக் கொண்டும், தொங்கிக் கொண்டும் மூன்றாயிரத்துக்கும் அதிகமானோர் பயணித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் டிக்கெட் எடுக்க வில்லை எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago