பதஞ்சலி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 3 நாள் சர்வதேச மாநாடு

By செய்திப்பிரிவு

சென்னை: பதஞ்சலி ஆராய்ச்சிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 நாள் சர்வதேச மாநாடு `தாவரங்களிலிருந்து நோயாளிகளுக்கு - எத்னோபார்மகாலஜி குறித்த மறு ஆய்வு' என்ற தலைப்பில் நடைபெற்றது.

மாநாட்டில் சுவாமி ராம்தேவ் பங்கேற்று, வந்திருந்த விஞ்ஞானிகளை வாழ்த்தினார். அவர் பேசும்போது, ``கடந்த 100 ஆண்டுகளாக அலோபதி மருத்துவ முறை பரவியுள்ளது. அதன் காரணமாகவே இதைத் தவிர வேறு மருந்தோ மருத்துவமோ இல்லை என மக்கள்நினைக்கின்றனர்.

ஆனால் ஆயுர்வேதத்தில் ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி செய்து மருந்துகளைத் தயாரித்து மனித நல்வாழ்வை முன்னோக்கிக் கொண்டுசென்றுள்ளோம். பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரியின் மூலம் பல ஆயுர்வேத மருத்துவர்களை உருவாக்கி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளோம்'' என்றார்.

ஆச்சார்ய பாலகிருஷ்ணா ஜி மகராஜ் நிகழ்ச்சியில் பேசும்போது, ``தற்போது உலகமே சுகாதார சேவைத் துறையில் பதஞ்சலியை நோக்கியுள்ளது. இதனால்மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் அதன் பலன்களைப் பெறமுடியும். இன்று உலகமே ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொண்டுள் ளது'' என்று கூறினார்.

பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனதலைமை விஞ்ஞானி டாக்டர் அனுராக் வர்ஷ்னி பேசும்போது, ``இந்த மாநாட்டின் மூலம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் கூடுதல்அறிவு பெறுவார்கள்; ஆயுர்வேத மும் பலம் பெறும்'' என்றார்.

டெல்லி மருந்தியல் அறிவியல்மற்றும் ஆராய்ச்சி பல்கலை. துணைவேந்தர் ரமேஷ் கே.கோயல், ரிஷிகேஷ் எய்ம்ஸ் தலைமை செயல் அதிகாரி மீனு சிங், எய்ம்ஸ் உயிர்வேதியியல் துறை உதவிபேராசிரியர் டாக்டர் அசோக் சர்மாஉள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE