உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 அக்டோபரில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பாணையில் பழங்குடியினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்து, உள்ளாட்சித் தேர்தலை 2016 டிசம்பருக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென்றும், இந்த தேர்தலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜூலை 26-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வில் நடந்தபோது மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க 50 நாட்கள் முழுமையாக வேண்டுமென அவகாசம் கோரியது. அதையடுத்து உத்தேச கால அட்டவணையை ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1-ம் தேதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நடந்தது.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் மற்றும் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆகியோர், முத்திரையிடப்பட்ட உறையில் உத்தேச கால அட்டவணையைத் தாக்கல் செய்தனர். அதைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், திமுக அவமதிப்பு வழக்கு, 'பாடம்' நாராயணன் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்கப்பட்டது.

கடந்த வாரமே இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (திங்கட்கிழமை), உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், ''செப்டம்பர் 18-க்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். நவம்பர் 17-க்குள் தேர்தலை நடத்தவேண்டும் 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அதன் தீர்ப்புக்கு உட்பட்டு இந்த தீர்ப்பு இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்