காரைக்குடி: காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆவணங்களை முறையாகப் பராமரித்த பெண் காவல ருக்கு டிஜிபி சைலேந்திர பாபு ரூ.5000 ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். அங்கு எப்ஐஆர், சிஎஸ்ஆர், குற்றப் பதிவேடு உள் ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். காவல்நிலையத்தில் ஆவணங்களை முறையாகப் பராமரித்த பெண் எழுத்தர் சசிகலா வைப் பாராட்டியதோடு, ரூ.5,000 வெகுமதி வழங்கினார்.
பின்னர் டிஜிபி செய்தியாளர்க ளிடம் கூறியதாவது: பொதுமக்கள் இனி புகார் கொடுக்க காவல் நிலையம் வர வேண்டியது இல்லை. காவலன் உதவி என்ற செயலி மூலமாகவே புகார் அளிக்கலாம். சைபர் கிரைம் தொடர்பான புகார் களை இந்தச் செயலியிலேயே பதிவு செய்யலாம்.
சைபர் குற்றங்கள் குறித்து உடனடியாக காவல் உதவி செயலியில் புகார் அளித்தால், பணத்தை மீட்க முடியும், பெண்கள் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டால், தனியாகச் செல்லும்போது உங் களை பெற்றோர் அல்லது குடும் பத்தினர் கண்காணிக்க முடியும். இதுபோன்று இந்தச் செயலியில் 66 வகையான வசதிகள் உள்ளன.
» ராமஜெயம் வழக்கு விசாரணையில் முன்னேற்றம்: திருச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு தகவல்
» நாகப்பட்டினம் | சிபிசிஎல் நிறுவனத்துக்கு சொந்தமான குழாய் உடைந்து கடலில் கலந்த கச்சா எண்ணெய்
தொழில் நடத்துவோர் தங் களிடம் பணிபுரியும் நபர்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மொபைலில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் குற்றம் அதிகரித்துள்ளது. முதலில் வெளிநாட்டினர் செய்து வந்த இந்த குற்றங்களைத் தற்போது உள்நாட்டிலும் சிலர் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது சிவகங்கை எஸ்பி செல்வராஜ் உடனிருந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago