தொழில்நுட்ப கோளாறு: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக, விமான நிலையம்-விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது விமான நிலையம்-விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே இன்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஆலந்தூர் வழித்தடத்தில் பயணிக்குமாறு மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE