தசை - எலும்பு புற்றுநோய் தொடர்பான மாநாடு: சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் தசை-எலும்பு புற்றுநோய் தொடர்பான 3 நாள் மாநாடுநடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த புற்றுநோய் துறை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஆனந்த்ராஜன், வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தசைக்கூட்டு பகுதி புற்றுநோய்க்கு உரிய நவீன சிகிச்சை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் 2014-ம் ஆண்டு இந்திய தசை-எலும்பு புற்றுநோயியல் சங்கம் (IMSOS) தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தின் 9-வது ஆண்டு மாநாடு சென்னையில் உள்ள தனியார்ஹோட்டலில் மார்ச் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மேலும், இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்களும், இந்தியா முழுவதும் உள்ள சிறந்த புற்றுநோயியல் நிறுவனங்களை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தமாநாட்டில், தசை-எலும்பு புற்றுநோய் துறையின் நுணுக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்