பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

தென்காசி: சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவி ஒருவருக்கு வணிகவியல்துறை பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மனஉளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி, முதல்வரின் தனிப் பிரிவுக்கும், உயர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.

ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் நேற்று வகுப்பு களை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அருண் தலைமை வகித்தார். ஆலங்குளம் டிஎஸ்பி முத்துப்பாண்டியன் தலைமையிலான போலீஸாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே நடவடிக்கையை துரிதப்படுத்தவில்லை என்றால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்