ஈரோடு இடைத்தேர்தல் | 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் முன்னிலை 

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றள்ளது.

இதன்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 32,959 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 10,727 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 1832 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 220 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்படி 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE