திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், திருப்பூர் பனியன் ராக்ஸ் சங்க நிர்வாக தலைவர் லியாகத் அலி, துணைத் தலைவர் புகழ் வேந்தன் ஆகியோர் மனு அளித்தனர்.

அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் சங்கத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், வட மாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றுகின்றனர். தற்போது முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தமிழர்கள், வடமாநிலத் தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள் பரவி வருகின்றன.

இதனால் வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பலர் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் எங்களது தொழில் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே தமிழக தொழிலாளர்கள், வடமாநிலத் தொழிலாளர்களை தாக்குகிறார்கள் என்ற தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை உள்ளதை உறுதிப் படுத்த வேண்டும். வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில் நிறுவனங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்