தகுதி நீக்கத்தை எதிர்த்து டிடிவி அணி எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் முறையீடு; நாளை விசாரணை

By ஆர்.பாலசரவணக்குமார்

 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்ட சட்டப்பேரவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக டிடிவி தரப்பில் ஆஜரான உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், நீதிபதி எம்.துரைசாமி முன்பு முறையீடு செய்துள்ளார்.

இதுகுறித்து வாதிட்ட வழக்கறிஞர் ராமன், ''எங்கள் தரப்பில் தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு நிலுவையில் இருக்கும்போது தகுதி நீக்கம் செய்துள்ளது சட்ட விரோதம் ஆகும்.

எங்கள் தரப்பு எம்எல்ஏக்கள் யாருக்கும் கட்சிக்கு விரோதமாகச் செயல்படவில்லை. எந்த கட்சிக்கும் தாவவில்லை. ஆனாலும் குறுக்குவழியில் பெரும்பான்மையை நிரூபிக்க அரசு முயல்கிறது. இதற்காக சட்ட விதிகளில் இல்லாத முரண்பட்ட காரணங்களைக் கூறி தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

இது ஏற்புடையதல்ல. எனவே சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் தகுதி நீக்கம் செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும். இதற்காக இதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும்'' என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, ''பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர், தமிழக முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. அத்துடன் உங்கள் வழக்கும் விசாரிக்கப்படும்'' என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்