சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், ஆளுநர் ஆர்.என். ரவி, ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதன் விவரம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: தங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்: எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, நாட்டிற்கு சேவையாற்றிட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை கிடைத்திட வாழ்த்துகிறேன்.
பிரதமர் மோடி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
» டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு குளறுபடி | மறுதேர்வுக்கு மறுப்பு - ஆணையத்துக்கு இழுக்கு!
» முதல்வர் ஸ்டாலினின் மிகப்பெரிய எதிரி யார் தெரியுமா? - பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா ருசிகரம்
மேலும், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு, தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு முதல்வர் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அமித் ஷாவிற்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
ஆளுநர் ஆர்.என். ரவி: 70வது பிறந்தநாள் காணும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago