புதுச்சேரி: மதச்சார்பற்ற கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து மக்களவைத் தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கலாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு, நிர்வாகக்குழு கூட்டங்கள் புதுச்சேரியில் கடந்த 25-ம் தேதி தொடங்கி நடந்தது. நேற்று தேசியக்குழுக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு டி. ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படுவதே முக்கியம். ஆகவே, மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஒருங்கிணைவது அவசியம். ஒன்றுபட்ட கூட்டணியால்தான் பாஜகவை தோற்கடிக்க முடியும். அதற்காக அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் அழைக்கிறோம். எதிர்க் கட்சிகள் மாறுபட்டு நிற்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல.
மதச்சார்பற்ற கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் பிரச்சினையில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்யலாம். ஏற்கெனவே அதுபோல பிரதமர் தேர்வு நடந்துள்ளது. அனைவரும் கூட்டாக தேர்தலுக்குப் பிறகு பிரதமரை தேர்வு செய்யலாம்.
மக்கள் பிரச்சினையை முன்னிறுத்தி வரும் ஏப்.14-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேசிய அளவில் மக்கள் இயக்கம் நடத்தப்படவுள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர்கள் கே.நாராயணா, காம்போ, அஷீஸ்பாஷா, புதுவைப் பிரதேசச் செயலர் சலீம், துணைச் செயலர் கே.சேதுசெல்வம், தேசியக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago