படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின்: மநீம தலைவர் கமல்ஹாசன் 

By செய்திப்பிரிவு

சென்னை: படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி புகைப்பட கண்காட்சியை மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற பெயரில் முதல்வரின் 70 ஆண்டு பயண புகைப்பட கண்காட்சி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.

கண்காட்சியை திறந்துவைத்த பிறகு கமல்ஹாசன் கூறுகையில், "கருணாநிதி மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்து அவருடன் எனக்கு நட்பு இருந்தது. நெருங்கிய நட்பு என்று கூறமுடியாது. ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று இரண்டு பேரும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

ஒரு பெரிய தலைவருக்கு மகனாக இருப்பதில் சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும், சவால்களும் நிறைய உண்டு. சந்தோஷத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். இது அவரின் பொறுமையை மட்டுமல்ல, திறமையையும் காட்டுகிறது. தன் திறமையால் தன்னை நிரூபித்து இந்த நிலைக்கு வந்துள்ளார்.

சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டு உள்ளனர். குறிப்பாக தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டு உள்ளனர். அதற்கு சவால்விடுவது போல் நாம் சரித்திரத்தை நினைவு கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்