5 ஆண்டுகளில் இந்தியர்களும் விண்வெளிக்கு செல்வார்கள்: முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் தகவல்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: 5 ஆண்டுகளில் இந்தியர்களும் விண்வெளிக்கு செல்வார்கள் என முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் வி.கே.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளர் வி.கே.ஹரிஹரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

”இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 4 செயற்கைக்கோள் அனுப்பப்பட்டு வந்தது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு 12 செயற்கைக்கோள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. சந்திராயன் -3 வரும் ஜூலைக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, உரிய அங்கீகாரம் பெற்று, அனுப்பப்படவுள்ளது. விண்வெளிக்கு செல்வதற்கு 5 ஆண்டுகளில் இந்தியர்கள் செல்வதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் அறிவியல் சார்ந்த படிப்புகளை அழுத்தமாக படித்து விண்வெளி ஆராய்ச்சி பணிக்கு வர வேண்டும்.
தற்போது மத்திய அரசு கிராமப்புற மாணவர்களுக்கும் அறிவியல் தொடர்பான படிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த பிப்ரவரி 28- ம் தேதி தேசிய விஞ்ஞானி தினத்தை கடைப்பிடித்து வருகிறது" என்றார்.

அவருடன் பாதுகாப்பு விஞ்ஞானி டி. பாண்டுரங்கன், மூத்த வழக்கறிஞர் தி.மா வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE