ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட் தரமானதா, இல்லையா என்பதை பொதுமக்களும், கட்டுமானத் தொழில் நிறுவனங்களும் ஆய்வு செய்து தெரிந்து கொள்வது அவசியம்.
ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதைத் தடுக்க ஆற்று மணலுக்கு மாற்று மணலான எம்-சாண்ட் பற்றி மக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடம் தமிழக அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எம்-சாண்ட் பயன்படுத்துவதாக இருந்தால் தனிப்பட்ட நபர் அல்லது கட்டுமானத் தொழில் நிறுவனங்கள் கண்டிப்பாக ஆய்வு செய்து கொள்வது அவசியம்.
ஒரு கை நிறைய எம்-சாண்ட் எடுத்துக் கொண்டு அதை கூர்ந்து நோக்குவதன் மூலம் அதில் அதிகளவு குவாரி தூசி இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதி செய்யலாம். செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை பெரியதாக்கிப் பார்ப்பதன் வழியாகவும் மணல் துகள்களின் அளவு மற்றும் கன வடிவம் ஆற்று மணலுக்கு இணையாக இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். தட்டையான துகள்கள் இருந்தால் அது தரமற்ற எம்-சாண்ட் ஆகும். கன வடிவில் துகள்கள் இருந்தால் அதுவே தரமானது.
சென்னை தரமணியில் உள்ள தேசிய தரப்பரிசோதனை ஆய்வகம், பொதுப்பணித் துறையின் மண் தன்மை ஆராய்ச்சி கோட்டம், தமிழக அரசு கட்டிட ஆராய்ச்சி நிலையம், கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன ஆய்வகம், சென்னை பெருங்குடியில் உள்ள ஐகொமெட் ஆய்வகம், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் ஆய்வகங்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரி ஆய்வகங்களில் எம்-சாண்ட் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
2 வகையான ஆய்வு
எம்-சாண்ட் இரண்டு வகையில் ஆய்வு செய்யப்படுகிறது. சாதாரண ஆய்வுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம். இந்த ஆய்வில் சல்லடை ஆய்வு (Sieve Analysis), நுண்ணிய துகள்கள் ஆய்வு (Fine Particles Analysis), வடிவம் குறித்த ஆய்வு (Shape Analysis) ஆகியன அடங்கும். இந்த ஆய்வு முடிவு ஒரே நாளில் கிடைத்துவிடும்.
விரிவான ஆய்வுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கட்டணம். இந்த ஆய்வில், இந்திய தர நிர்ணய அமைப்பின் வரையறையின்படி அதாவது IS 383: 2016 என்ற குறியீட்டின்படி உறுதித்தன்மை, தண்ணீர் உறிஞ்சும் தன்மை, குளோரைடு மற்றும் சல்பேட் அளவு உள்பட 12 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விரிவான ஆய்வு முடிவுகள் கிடைக்க ஒரு மாதம் வரை ஆகும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கூடங்குளம் அணு மின் நிலையம் போன்ற பெரிய நிறுவனங்கள் எம்-சாண்ட் தரமானதா என்பதை அறிவதற்கு சொந்தமாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள் வைத்திருக்கின்றன.
இந்த நிறுவனங்கள் 3 மாதங்கள், 6 மாதங்களுக்கு ஒருமுறை எம்-சாண்டை ஆய்வு செய்து கொள்கின்றன. பொதுமக்களைப் பொருத்தவரை, எம்-சாண்ட் வாங்குவதற்கு முன்பு அரசு அல்லது தனியார் ஆய்வகங்களில் ஆய்வு செய்து கொள்ள வேண்டியது அவசியம். எம்-சாண்ட் வாங்கும் போதெல்லாம் ஆய்வு செய்து கொள்வது நல்லது என்கின்றனர் கட்டுமான தொழில் நிபுணர்கள்.
எம்-சாண்ட் விலை பற்றி பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் தரமான ஒரு கனஅடி எம்-சாண்ட் ரூ.60 முதல் ரூ.70 வரை கிடைக்கிறது. ஆற்று மணல் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. ஆனாலும், ஆற்றுமணல் கிடைப்பது அரிதாக இருக்கிறது. எம்-சாண்ட் தயாரிப்பு தொழிற்சாலைகள் எண்ணிக்கையும், எம்-சாண்ட் தரம் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகங்கள் எண்ணிக்கையும் அதிகரித்தால்தான் எம்-சாண்ட் அதிகளவில் கிடைத்து பயன்பாடும் அதிகரிக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago