மெட்ரோ ரயில் திட்டம் - சேலம், திருச்சி, நெல்லையில் சாத்தியக்கூறு ஆய்வு தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பு திட்டத்துக்கு பிறகு, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் 54 கி.மீ. தொலைவுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. தமிழக அரசு அறிவிப்பின்படி, சென்னையைபோல கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒவ்வோரு கட்டமாக செய்து வருகிறது.

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கி.மீ தொலைவுக்கு 18 ரயில் நிலையங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்தபிறகு, அந்நிறுவனம் 75 நாட்களில் விரிவான திட்ட அறிக்கையை அளிக்கும். அந்த அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலியில் மேற்கொள்ளப்படும் சாத்தியக் கூறு ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டு வரும் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் இறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE