கோட்டையை நோக்கிய கனவை ட்விட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன? என்று கமலை தமிழக பாஜக தலைவர் தமிழசை சவுந்தர்ராஜன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கோவையில் புதன்கிழமை இரவு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமலஹாசன், "என்னை ட்விட்டர் நாயகன் என்று அரசியல் கட்சியினர் கூறுகிறார்கள். அதை விமர்சனமாகவே பார்க்கிறேன். நான் அரசியல் பிரவேசத்தை எப்போதோ தொடங்கிவிட்டேன். அதை ட்விட்டரில் தொடங்கினால் என்ன? கோவையில் தொடங்கினால் என்ன.
நான் கோட்டையை நோக்கி நகர்ந்ததாக வைத்துக் கொள்ளுங்கள். தொழிற்சங்கங்கள் குறை கூறுவதற்காக கோட்டைக்குச் செல்வதைப் போல. இதற்கு வேறு அர்த்தம் கற்பித்தால் நான் பொறுப்பல்ல. போராட்டத்தை எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம் என்றார்.
இந்நிலையில் கமலை மறைமுகமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தர் ராஜன் ட்விட்டர் பக்கத்தில், ''கோட்டையை நோக்கிய மனக்கோட்டையை ட்விட்டரில் கட்டினால் என்ன? கோவையில் கட்டினால் என்ன? சினிமாவைக் கோட்டை விட்டபின் வேறு என்ன கோட்டைதான் கட்ட?'' என்று கமலை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago