மார்ச் 20-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழக சட்டமன்றப் பேரவை விதி 26 (1)ன்படி, 2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை வரும் மார்ச் மாதம் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார்.

தொடர்ந்து 2023-24ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையினை மற்றும் 2022-23-ம் ஆண்டுக்கான இறுதி கூடுதல் மானியக் கோரிக்கையினையும் நிதியமைச்சர், மார்ச் 28-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். மார்ச் 20-ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சட்டமன்றம் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்