தோட்டங்களில் வாடும் செண்டுமல்லி: உரிய விலை இல்லாததால் ஓசூர் விவசாயிகள் கவலை

By ஜெயகாந்தன்

ஓசூர்: செண்டுமல்லிக்கு உரிய விலை கிடைக்காததால், அறுவடை செய்யாமல் தோட்டங்களிலியே பூக்களை வாடவிட்டுள்ளனர் ஓசூர் விவசாயிகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட பூக்கள் சொட்டு நீர் பானம் மூலம் சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யும் பூக்கள் ஓசூர் மலர் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

தற்போது வெயில் மற்றும் குளிர் என மிதமான தட்பவெப்பம் காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது விழாக்கால சீசன் இல்லாததால், பூக்களின் தேவை குறைந்துள்ளதால், பூக்களின் விலை வழக்கத்தை விட மிக குறைவாக குறைந்துள்ளது. அதேபோல் கடந்த மாதம், ரூ.30 முதல் 70 வரை விற்பனையான செண்டுமல்லி தற்போது தரத்திற்கு ஏற்றார் போல், ஒரு கிலோ ரூ.12 முதல் 20 வரை விற்பனையாகிறது.

சொட்டு நீர்பாசனம் மூலம் சாகுபடி செய்த செண்டுமல்லி தற்போது அறுவடைக்கு தயாரக இருந்தும், விலை இல்லாததால் பூக்களை விற்பனைக்கு கொண்டு செல்ல அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து செலவிற்கு கூட வருவாய் இல்லாததால், தேன்கனிக்கோட்டை , அய்யூர், பெட்டமுகிலாளம் போன்ற அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த சாமந்தி பூக்களை விவசாயிகள் அறுவடை செய்யாமல், தோட்டங்களிலியே அப்படியே விட்டுள்ளதால், வெயிலுக்கு பூக்கள் வாடுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE