ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | 3 மணி வரை 59.28% வாக்குப்பதிவு: இரண்டு மணி நேரத்தில் 4% மட்டுமே அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 3 மணி வரை 59.28% வாக்குப் பதிவாகியுள்ளது. குறிப்பாக கடந்த 2 மணி நேரத்தில் வாக்குப்பதிவு 4 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தற்போது, மாலை 3 மணி வரை 59.28% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி 1.34 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். 65,350 ஆண்கள் மற்றும் 69,400 பெண்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மதியம் 1 மணி வரை 55.56% வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆனால் அடுத்த 2 மணி நேரத்தில் வெறும் 4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

அதேபோல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகிறார். வெப் கேமரா மூலமாக வாக்குச்சாவடிகளை நேரடியாக அவர் கண்காணித்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்