ஈரோடு: வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி வாக்காளர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

ஈரோடு: வாக்குச்சாவடியில் அடிப்படை வசதி இல்லை என்று தெரிவித்து வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இத்தேர்தலில் வாக்களிக்க 2.27 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முன்னதாக காலை 9 மணி வரை 10.10% வாக்குப் பதிவாகி இருந்தது. காலை 11 மணி வரை 27.89% வாக்குப் பதிவாகி உள்ளது. இதன்படி கடந்த 4 மணி நேரத்தில் 32,562 ஆண்கள் மற்றும் 30,907 பெண்கள் என்று மொத்தம் 63,469 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று தெரிவித்து வாக்காளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் பொது மக்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதாகவும், தண்ணீர் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுபோன்ற சிறு சம்பவங்களைத் தாண்டி ஈரோட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE