சென்னை: பெண் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு தெரிவித்தார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, குஷ்புவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு குஷ்பு அளித்த பேட்டியில்,"மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் சுயமரியாதைக்கு தொடர்ந்து போராடி வருகிறேன். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் பயம் இல்லாமல் தங்களுக்கு நேரும் பாதிப்புகளைக் கூற வேண்டும். உங்களுக்கு குரல் கொடுக்க நான் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago