கோவை வழியாக இயக்கப்படும் 5 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை வழியாக இயக்கப்படும் 5 ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கோவை - லோக்மான்ய திலக் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 11014) நாளை (பிப்.28), சேலம் - கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே மாற்று வழியில் திருப்பத்தூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம் வழியே இயக்கப்படும்.

இந்த ரயில், தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களில் நிற்காது. கேஎஸ்ஆர் பெங்களூரு - எர்ணாகுளம் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12677), நாளை மாற்று வழியில் கிருஷ்ண ராஜபுரம், பங்கார பேட், திருப்பத்தூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் கார்மல்ராம், ஓசூர், தருமபுரி ரயில் நிலையங்களில் நிற்காது.

ஆலப்புழா - தன்பாத் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 13352) ஆலப்புழாவில் இருந்து நாளை காலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக காலை 7.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூரு இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12678), எர்ணாகுளத்தில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். நாகர்கோவில் - மும்பை சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16340) நாளை தேவையான இடத்தில் 50 நிமிடங்கள் நிறுத்திவைத்து இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்