மனித உரிமை மீறலில் காவலர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பொய் வழக்கு பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நான்கு காவலர்களுக்கு மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் பாபு தனது நண்பர்அசோக் உடன் கடந்த 2019-ம்ஆண்டு மயிலாடுதுறை பேருந்துநிலையம் சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் பாலு, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி பிரவீன் பாபுவையும் அவரது நண்பர் அசோக்கையும் தாக்கியுள்ளார்.

இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்தச் சென்ற காவலர் பாலு, மேலும்மூன்று காவலர்களுடன் இணைந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த இருவரும் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்தனர். வழக்கை விசாரித்த ஆணையம், இருவருக்கும் தலாரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்தத் தொகையை நான்கு காவலர்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து 4 காவலர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைவிசாரித்த நீதிபதிகள் வேலுமணி,ஹேமலதா அமர்வு, “போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி தாக்குதல் நடத்தியது உறுதியாகிறது.

மனித உரிமை மீறலில்காவலர்கள் ஈடுபட்டது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் மனிதஉரிமைகள் ஆணையம் பிறப்பித்தஉத்தரவில் தலையிட விரும்பவில்லை” எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்