திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்ட விசைத் தறியாளர் சங்கத் தலைவர் உயிரிழந்ததையடுத்து, கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் மரணமடைந்தார்.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத் தறியாளர் சங்கத் தலைவராக இருந்தவர் பழனிசாமி (78). இவர், கடந்த 30 ஆண்டுகளாக சங்கத் தலைவராகவும், கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வந்தார். இவர் தலைமையில் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். தற்போது கூட தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் கட்டணம் செலுத்தாமல் கடந்த சில மாதங்களாக விசைத் தறியாளர்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுகோவை தனியார் மருத்துவமனையில் பழனிசாமி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இந்த தகவல் அவரது மனைவி கருப்பாத்தாளுக்கு (72), மகன்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.
கணவர் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் அவர் மயக்க மடைந்தார். தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தம்பதி உடல்கள், திருப்பூர் மாவட்டம் வாழைத் தோட்டத்து அய்யன் கோயில் அருகே அய்யம் பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
தம்பதிக்கு, விசைத்தறியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கில் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago