சென்னை: சென்னை சென்ட்ரல்-மைசூரு வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நின்று செல்லும் என்று வெளியான தகவல் தவறானது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் என்ற பெயரில் அதிநவீன விரைவு சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, நாட்டின் 5-வது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே கடந்த ஆண்டு நவ.11-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மதியம்12.20-க்கு மைசூரு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், இந்த ரயில்மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது. இந்த ரயிலுக்கு நாளுக்கு நாள் பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுவந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நின்று செல்ல சென்னை கோட்ட அதிகாரிகள் ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த ரயில்திருவள்ளூரில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் சில நாளிதழ்களில் செய்தி வெளியானது.
» IND vs AUS | 3-வது டெஸ்டில் இருந்து பாட் கம்மின்ஸ் விலகல்
» காரல் மார்க்ஸ் குறித்து அவதூறு பேச்சு: ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்புஅதிகாரி பா.குகநேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``திருவள்ளூரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது'' எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago