பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே பாலம் பராமரிப்பு பணி: விரைவு, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: பாலம் பராமரிப்பு பணி காரணமாக, கோவை, திருப்பதி உள்ளிட்ட சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால், பிப்.28-ம்தேதி சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம், சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில் (எண்.12675), சென்னை சென்ட்ரல் - திருப்பதி விரைவு ரயில் (16057) ஆகியவை 30 நிமிடங்கள் தாமதமாக சென்ட்ரலில் இருந்து புறப்படும்.

ஈரோடு - சென்னை சென்ட்ரல் (22650) ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரையும், கேஎஸ்ஆர் பெங்களூரூ - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12658) திருவள்ளூர் வரையும் மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (22652) கரூர், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், மல்லூர், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக செல்லாது. இந்த ரயில் திண்டுக்கல், விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூரில் இந்த ரயில் நின்று செல்லும்.

தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயில்: இதேபோல, தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் (13351), இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர அதிவிரைவு ரயில் (22645) ஆகியவை வரும் 27-ம் தேதியும், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில்(13352), கொச்சுவேலி - கோர்பா வாரம் இருமுறை இயக்கப்படும் அதிவிரைவு ரயில் (22648) ஆகியவை மார்ச் 2-ம் தேதியும் சென்னை சென்ட்ரலுக்கு பதிலாக பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். பெரம்பூரில் இந்த ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில் 2 நாட்கள் ரத்து: அதேபோல புறநகர் மின்சார ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படுகின்றன. அதாவது, சென்னை சென்ட்ரல்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 10.35, சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இரவு 11.30, 11.45,பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இடையே 11.55 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் இன்று (பிப். 25) ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையேஅதிகாலை 4.15, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே அதிகாலை 4.30, 5.40, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே அதிகாலை 5.30, ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 3.50, 4, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 3.20, திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் இடையே அதிகாலை 3.50, 4.45, அரக்கோணம் - சென்னைசென்ட்ரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை (பிப். 26) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணி, பட்டாபிராம் - சென்னை சென்ட்ரல் இடையே இரவு 10.45, திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே இரவு9.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆவடி - சென்னை சென்ட்ரல் இடையே இன்று ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே அதிகாலை 3.50 மற்றும் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையே அதிகாலை 5 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் நாளை சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே ரத்து செய்யப்படுகின்றன என்று தெற்கு ரயில்வே சென்னை மண்டலம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்