மதுரை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களை ஏபிவிபி மாணவர்கள் தாக்கியதாக தமிழக முதல்வர் பதிவிட்ட ட்விட்டர் கருத்தை திரும்பப் பெறவேண்டும் என மதுரையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) மத்திய செயலாக்கக் குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் கோபி, இணைச் செயலாளர் ஜெயபிரியா ஆகியோர் கூறியதாவது:
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் விழாவின்போது, சில இடதுசாரி அமைப்பினர் புகுந்து சிவாஜியின் படத்தை அகற்ற முயன்றனர். இதை ஏபிவிபி மாணவர்கள் தடுக்க முயன்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிவாஜியின் படத்தை சேதப்படுத்திவிட்டனர்.
இந்நிகழ்வு குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது ஏபிவிபியினர் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது’ என குறிப்பிட்டுள்ளார். இது தவறான தகவலாகும். இதை உடனடியாக அவர் திரும்பப் பெறவேண்டும்.
» பேசின்பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே பாலம் பராமரிப்பு பணி: விரைவு, மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்
» சென்னை | கூட்டாளிகளுக்கு சம்பளம் கொடுத்து வழிப்பறி: தலைமறைவாக இருந்த பிரபல கொள்ளையன் கைது
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மொழி, இனம், சாதி கடந்து மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களிடையே மொழி ரீதியாக பிளவை ஏற்படுத்தும் விதமாக முதல்வரின் கருத்து உள்ளது.
இப்பதிவை அவர் நீக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம். தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago