திருமண விழா அதிமுகவின் வெற்றி விழா மாநாடானது: மகள் திருமண விழாவில் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

By செய்திப்பிரிவு

மதுரை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் 51 ஏழை ஜோடிகள் திருமண விழா, அதிமுகவின் வெற்றியை அறிவிக்கும் மாநாடாக மாறியது, என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும், மாநில ஜெ., பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் ஏற்பட்டால் 51 ஏழை ஜோடிகளுக்கும், அவரது மகள் பிரியதர்ஷினி-முரளி திருமண விழாவும் மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா நினைவு மண்டப வளாகத்தில் நடந்தது.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி, ஆர்.பி.உதயகுமார் மகள் மற்றும் 51 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்திப் பேசிய தாவது: ஆர்.பி.உதயகுமார் மாவட்டச் செயலாளர், ஜெ. பேரவை மாநிலச் செயலாளர், எம்எல்ஏ உள்ளிட்ட பல பதவிகளை வகித்தாலும் அடக்கம் அவரின் தனிச் சிறப்பாக உள்ளது.

கட்சிப் பணிகளில் ஆர்வமாக செயல்படக் கூடியவர். அவரைப் போன்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களால்தான் இந்த இயக்கம் எழுச்சியுடன் செயல்படுகிறது. ஆர்.பி.உதயகுமார் இறை நம்பிக்கை அதிகம் கொண்டவர். அவர் ஏற்பாடு செய்த இந்தத் திருமண விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்றுப் பேசுகையில், ‘அதிமுகவை கட்டிக்காக்கிற பொறுப்பையும், தமிழக மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் உச்ச நீதிமன்றம் கே.பழனிசாமிக்கு வழங்கி இருக்கிறது. எம்ஜிஆர், ஜெய லலிதாவை நம்பினோர் யாரும் கெட்டுப் போனதில்லை. அவர்களின் மறு வடிவமாக கே.பழனிசாமி அதிமுக தொண்டர்களுக்குத் திகழ்கிறார். விரைவில் தமிழக முதல்வராவார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பு ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலை முன், இந்த விழாவில் திருமணமாகப்போகும் மணமக்களுக்காகவும், வர விருக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்காகவும் வணங்கிய காட்சி மனதை உருக வைத்தது. அவரது எண்ணம் போல் திருமணம் வெற்றிகரமாக முடிந்தது.

அதிமுகவுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந் துள்ளது. அதனால் திருமண விழா தற்போது அதிமுகவின் வெற்றியை அறிவிக்கும் மாநாடாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருமணம் செய்து கொண்ட அனைத்து ஜோடிகளுக்கும், பல்வகை சீர்வரிசைகளை ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் கே.பழனிசாமி வழங்கினார். முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க வந்த கே.பழனிசாமியையும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் வரவேற்று திருமங்கலத்தில் இருந்து டி.குன்னத்தூர் வரை பேனர்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்