பழனிசாமிக்கு ஜி.கே.வாசன், திருமாவளவன் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்என்று உச்ச நீதிமன்றம் இன்றைக்கு (பிப்.23) தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது ஒட்டுமொத்த அதிமுகவினருக்கு புத்துணர்ச்சியைஅளித்திருக்கிறது. கடந்த2022 ஜூலை.11-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட் டது செல்லும் என்பதை இத்தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.

சட்ட விதிகளின்படி தீர்ப்புவழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இத்தீர்ப்பானது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருக்கும், அதிமுகவின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். அதிமுகவின் தொடர் பயணம் இரட்டை இலை சின்னத்துடன் வெற்றிப்பயணமாக அமையவாழ்த்துகளை தெரிவித்துக்கொள் கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வை தொடங்கிய பழனிசாமி, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்படுத்தப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்கு மட்டுமே பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE