மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (மே 30) ஓட்டல்கள் மூடப்படும் என தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர்.சீனிவாசன் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ள ஓட்டல்களுக்கு இதுவரை 0.5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் ஓட்டல்களுக்கான வரி 2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6 மடங்கு உயர்ந்து 12 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ஏசி வசதி கொண்ட ஓட்டல்களுக்கு 8 சதவீதமாக இருந்த வரி, தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த புதிய வரி உயர்வு அமலானால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
மத்திய அரசிடம் வரியை உயர்த்தக் கூடாது என கோரிக்கை மனு அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, இந்த வரி உயர்வை எதிர்த்து நாளை (மே 30) தமிழகம் முழு வதும் ஓட்டல்களை அடைத்து போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவ தும் சுமார் 1.5 லட்சம் ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்பார் கள். சாதாரண ஓட்டல்கள் அனைத்துக்கும் 5 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கக்கூடாது. ஏசி வசதி கொண்ட ஓட்டல்களில் 12 சதவீதத்துக்கு மேல் வரி விதிக் கப்படக்கூடாது என்பதுதான் எங் களின் கோரிக்கை. எனவே, எங்களின் நியாயமான கோரிக்கை களை அரசு நிறைவேற்ற வேண் டும். தற்போது அறிவிக்கப் பட்டுள்ள புதிய வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.
மருந்து கடைகளும்..
ஆன்லைனில் மருந்து விற் பனைக்கு மத்திய அரசு அனுமதிக் கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி (நாளை) நாடுமுழுவதும் மருந்துக் கடைகள் மூடப்படுவதாக மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago