மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஒரே நாளில் 1 அடி நீர்மட்டம் உயர்ந்தது

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணைக்கு கடந்த வாரம் வரை நீர்வரத்து பெயரளவில் மட்டுமே இருந்தது. கடந்த 16-ம் தேதி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 16 கனஅடி என இருந்தது. 120 அடி உயரம் உள்ள அணையில் அப்போது 20.13 அடி உயரத்துக்கு மட்டுமே குட்டை போல நீர் தேங்கியிருந் தது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அணைக்கான நீர்வரத்தில் சற்று மீட்சி ஏற்பட்டது. அணைக்கான நீர்வரத்து விநா டிக்கு 153 கனஅடியாக அதிகரித் தது. அப்போது அணையின் நீர்மட்டம் 19.79 அடியாவும், பாசனத்துக்காக நீர் வெளியேற் றம் விநாடிக்கு 500 கனஅடி யாகவும் இருந்தது.

அணை மற்றும் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கோடை மழை காரணமாக, அணைக்கான நீர்வரத்து கணிசமாக அதிக ரிக்கத் தொடங்கியது. 24-ம் தேதி நீர்வரத்து விநாடிக்கு 1,056 கனஅடியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் (27-ம் தேதி) நீர்வரத்து 2,329 கனஅடியாக இருமடங்கு அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 20.85 அடியாக உயர்ந்தது.

இந்நிலையில், காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினத்தைவிட நேற்று இருமடங்கு அதிகரித்து, விநாடிக்கு 4,169 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற் றத்தைவிட, நீர் வரத்து 4 மடங்கு அதிகரித்ததால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்