மாட்டிறைச்சி விவகாரத்தில் நாட்டில் புரட்சி வெடிக்கும்: தமிழருவி மணியன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மாட்டிறைச்சி விவகாரத்தில், இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும் என திருப்பூரில் காந் திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.

திருப்பூர் கொங்கு பிரதான சாலையில், காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்துவைத்த, அதன் நிறுவனத் தலைவர் தமிழ ருவி மணியன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

தற்போது, திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை களில் அதிக மாற்றம் தெரிகி றது. நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக சொல்லிக் கொள்ளும் ஸ்டாலினின் அருகில் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட் டோர் இருக்கும் வரை, அவரால் நேர்மையான நிர்வாகத்தை வழங்க முடியாது. இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு சக்தி உருவெடுக்க வேண்டும். அதிமுகவின் இரு அணிகளிலும், ஊழல் மலிந்தவர்கள் அதிகம் இருப்பதால், மக்கள் இரு அணி களையும் ஏற்க மறுக்கின்றனர்.

பொதுமக்களின் பெரும் பான்மை பலத்தோடு ரஜினிகாந்த் இருக்கிறார். ரஜினிகாந்த் அரசி யல் களத்துக்கு நிச்சயம் வருவார். ரஜினிகாந்தின் தூய்மையான, நேர்மையான அரசியலுக்கு காந்திய மக்கள் இயக்கம் துணையாக இருக்கும். ரஜினியை நேரில் சந்தித்தபோது ஜாதி, மதம், வகுப்புவாத அரசியல் பக்கம் சென்றுவிடக் கூடாது என வலியுறுத்தி உள்ளேன். கட்சியின் பெயர், வகுத்துள்ள திட்டங்கள், வியூகங்களை ரஜினிகாந்தே விரைவில் விளக்குவார்.

உத்தரபிரதேசத்தில் சட்டப்பேர வைத் தேர்தல் வெற்றிக்குப் பின், பாஜக நேரடியாகவே மதவாத அரசியலை புகுத்தி வருகிறது. தனிமனித உணவு உரிமையை பறிக்கும் அளவு பாசிச அரசி யலை செய்து வருகிறது. மாட்டி றைச்சி விவகாரத்தில், இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும். சட்டத்தை மத்தியில் ஆளும், பாஜகவே திரும்பப் பெறும் நிலை வெகுவிரைவில் வரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்