சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - கெல்லீஸ் வழித்தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடமான மாதவரம் - சிறுசேரி சிப்காட் 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுரங்கப்பாதையில் 29 நிலையங்களும், உயர்மட்ட பாதையில் 20 நிலையங்களும் என மொத்தம் 49 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில், முதல் சுரங்கம் துளையிடும் பணி மாதவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இந்நிலையில், மாதவரம் பால்பண்ணை - கெல்லீஸ் பாதையில் தற்போது 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் - கெல்லீஸ் வரை 9 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இருமார்க்கமாக மொத்தம் 18 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. மொத்தம் 18,551 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட வேண்டும்.
இதில் தற்போது வரை 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. மாதவரத்தில் சுரங்க ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. முராரி மருத்துவமனை, பெரம்பூர், அயனாவரம், ஓட்டேரி, புரசைவாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
» உலக தாய்மொழி நாள் விழாவுக்கு உரிமை கொண்டாட வேண்டியது தமிழகம்: புலவர் செந்தலை ந.கவுதமன் கருத்து
» தி.மலை | 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை வழக்கில் இருவரை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி
மக்கள் அடர்த்தி அதிகமுள்ள இப்பகுதியில் எவ்வித தொந்தரவும் இன்றி சுரங்கப்பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான பணிகள் இரவில் நடைபெறுகிறது. சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 18 முதல் 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago